Description
தந்தை பெரியார் மொழிப் பற்றை தேசிய உணர்வுடன் இணைத்து நோக்கினார். அவருடைய மொழிசார் சிந்தனைகள் தமிழ்மொழிக்காக மட்டுமின்றி, மொழியின் சமூக, அரசியல், அறிவியல் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றன.
இந்த நூலில், மொழியின் தோற்றம், வளர்ச்சி, சமூகத்தில் மொழியின் தாக்கம் ஆகியவைகளை அறிவியல் பார்வையில் அலசப்படுகின்றன. ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் மொழியில்தான் உள்ளது. பெரியார் கூறியது போல், மொழிப்பற்று இல்லையேல் நாட்டுப்பற்றும் இருக்க முடியாது.
தமிழின் அறிவியல் வளர்ச்சியை உணர்த்தும் பல்வேறு கோணங்களில் இந்த நூல் முக்கியமானதொரு ஆய்வாக அமைகிறது. மொழியின் சமூகப் பாதிப்பு, கல்வியில் மொழியின் முக்கியத்துவம், பொதுநல வளர்ச்சியில் மொழியின் பங்கு போன்ற விவாதங்களை இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது.